Government bus tirichy under the influence of cannabis; Youth arrested

கரூரில் இருந்து திருச்சி மார்க்கமாக இயக்கப்பட்ட அரசு சிறப்பு பேருந்தானது, வழக்கம்போல் திருச்சி வ.உ.சி. சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதன் ஓட்டுநரும், நடத்துனரும் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றிருந்த நிலையில், நிறுத்தப்பட்டிருந்த பேருந்து நகா்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அதனை தடுக்க முயன்றுள்ளனா்.

Advertisment

ஆனால், அந்த பேருந்து உள்ளே ஒரு இளைஞரால் இயக்கப்பட்டதை அறிந்து அவா்கள் கூச்சலிட்டும், பேருந்தை நிறுத்தாமல் போனதால் வழியில் சென்று கொண்டிருந்த மற்றொரு ஓட்டுநருடைய இருசக்கர வாகனத்தில் அந்த பேருந்தை துரத்தி சென்று பிடித்துள்ளனா்.

Advertisment

Government bus tirichy under the influence of cannabis; Youth arrested

இதுகுறித்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா், அந்த இளைஞரை கைது செய்தனா். அவர் கைது செய்யப்பட்டபோது கஞ்சா போதையில் இருந்ததால் விசாரணையில் முன்னுக்குபின் முராணக பதில் அளித்துள்ளார். தொடர் விசாரணையில் தன்னுடைய பெயா் அஜித்(22) என்றும், பெரியமிளகுபாறை பகுதியை சோ்ந்தவா் என்றும் கூறியுள்ளார். மேலும் விசாரணையில் அவா் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளது தெரியவந்தது. அடிக்கடி இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வரும் அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.