tiruchi

திருச்சி தாரநல்லூர், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் மணி (எ) மணிகண்டன் (38). இவரை பிளாக் மணி என்றே அழைக்கிறார்கள். சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசையில் குறும்படங்கள் சில எடுத்திருக்கிறார். இவர் மாத இதழ்களில் நிருபராகப் பணியாற்றி வந்தார். மணி தங்கியுள்ள வீட்டிற்கு முன்பு அவருடன் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் மணியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனைக்குக் செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்ததிருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வழக்குப் பதிவு செய்து ஜான், அஜித்குமார், ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

மணிக்கு பழனியம்மாள் என்ற மனைவியும் ஷிவானி, சிவசாமி மற்றும் சிவஹரி என்ற மூன்று பிள்ளைகளும்உள்ளனர்.