Skip to main content

“செந்தில் பாலாஜி சுயநினைவுடன் இல்லை...” - அமைச்சர் சேகர் பாபு

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

 'Senthil Balaji is not conscious'- Minister Shekhar Babu interview

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர்.

 

இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இது குறித்து கூறுகையில், ''அமலாக்கத்துறையின் செயல் மனித உரிமை மீறல். ஜனநாயக நாட்டில் தான் நாம் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த ஒரு விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் அமைச்சர் உதயநிதி, ''செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம். பாஜக அரசின் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவோடு இல்லை. தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி கண் திறந்து பதில் சொன்ன பிறகுதான் என்ன நடந்தது என தெரிய வரும்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் திமுக எம்பி என்.ஆர். இளங்கோ, ''அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. மருத்துவர்கள் அறிக்கை பார்த்த பிறகு தான் உடல்நிலை குறித்து தெரிய வரும். செந்தில் பாலாஜி பார்க்க அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்