Skip to main content

அ.தி.மு.க இரு அணிகளும் ஒரே நேரத்தில் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அனுமதி கேட்டதால் 144. பரபரப்பு

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
அ.தி.மு.க இரு அணிகளும் ஒரே நேரத்தில் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அனுமதி கேட்டதால் 144. பரபரப்பு



புதுக்கோட்டையில் அ.தி.மு.க வின் இரு அணி நிர்வாகிகளும் ஒரே நேரத்தில் பேரணி நடத்தி எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை போட அனுமதி கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் குவிந்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 144 உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரமுத்து மாவட்டச் செயலாளராக இருக்கும் நிலையில் தினகரன் அணியின் சார்பில் கடந்த வாரம் வைரமுத்து நீக்கப்பட்டு மணமேல்குடி கார்த்திகேயன் புதிய மா.செ வாக அறிவிக்கப்பட்டார். அதனால் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. மேலும் கார்த்திகேயனின் அண்ணன் ரெத்தினசபாபதி இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பேட்டி கொடுத்துவிட்டு அன்று இரவே சென்னையில் தினகரனை சந்தித்த்துடன் தற்போது புதுக்சேரியில் தங்கி உள்ளார். 

இந்த நிலையில் புதிய மா.செ வாக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திகேயன் புதிய மாவட்ட கட்சி அலுவலகம் அரிமளம் சாலையில் பிடித்து அதன் திறப்பு விழா மற்றும் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பேரணி நடத்த திட்டமிட்டு பத்திரிக்கை விளம்பரங்களும் கொடுத்திருந்தார். 

நாளை செப்டம்பர் முதல் நாளில் பேரணி, சிலைகளுக்கு மாலை அணிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் உத்தரவு பெற்று இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற மனு கொடுக்க சில வழக்கறிஞர்களுடன் வந்தார். எஸ்.பி. செல்வராஜ் அலுவலக பணியில் இருந்த்தால் கால தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் டி.எஸ்.பி. பாலகுரு கார்த்திகேயனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் எடப்பாடி அணியைச் சேர்ந்த மா.செ வைரமுத்து, ந.செ பாஸ்கர், திருவரங்குளம் ஒ.செ. துரைதனசேகரன் மற்றும் ர.ர.க்கள் திடீரென கும்பலாக வந்து 1 ந் தேதி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு முன்பு எம்.ஜி.ஆர்., அண்ணாசிலைகளுக்கு மாலை அணிவித்து பேரணியாக செல்ல அனுமதி வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதனால் மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இரு மனுக்களையும் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் யாருக்கும் அனுமதி வழங்காத நிலையில் மாலை காவல் துறை உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்ததுள்ளது. இந்த நிலையில் இரு தரப்பும் சிலைகளுக்கு மாலை அணிவித்து பேரணி நடத்தினால் பிரச்சணைகள் வரும் என்பதால் இரு அணிகளுக்கும் அனுமதி வழங்க மறுக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் சிலைகளுக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படலாம் என்றும் கூறுகின்றனர்.

தினகரன் தரப்பு புதிய நிர்வாகிகள் மாலை அணிவித்து பேரணி நடத்தி பலத்தை காட்டிவிடக் கூடாது என்பதற்காகவே போட்டிக்கு எடப்பாடி அணி மனு கொடுத்துள்ளது. அதற்காகவே காவல் துறையும் துணை போகிறத என்கின்றனர் தினகரன் அணியினர்.

இந்த பிரச்சனையால் புதுக்கோட்டை நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை காலை மேலும் பரபரப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திடீரென சிலைகள் அமைந்துள்ள பகுதிக்கு மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 144 தடை போடப்பட்டுள்ளது. இதனால் மேலும் பரபரப்பு எற்பட்டுள்ளது. 

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்