ADVERTISEMENT

கோரிக்கை வைத்த மாணவர்கள்; மூன்றே நாட்களில் நிறைவேற்றிய திமுக எம்எல்ஏ!

05:15 PM Apr 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் அதிகமான அளவில் மலைவாழ் மற்றும் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து வெளியூர் சென்று படித்து வரும் மாணவர்கள் பள்ளி கல்லூரியில் சேரவும், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் உடனடியாக சாதி சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பாக விரைவில் சாதி சான்றிதழ்கள் கிடைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனியாக வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என அரசு மூலம் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார். அதோடு லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் மலைவாழ் மற்றும் பழங்குடியின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை உடனடியாக ஏற்பாடு செய்தார்.

சாதி சான்றிதழ் வேண்டுமென கோரிக்கை வைத்து மூன்று நாட்களில் அதனை நிறைவேற்றும் விதமாக உடனடியாக சாதி சான்றிதழ்கள் கிடைக்க தனி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்து அக்கிராமத்தில் வீடுகள் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் பெற்று அதிகாரிகள் மூலம் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளார்.

மேலும் சாலை வசதி, பாசன வாய்க்கால் மேம்பாடு வசதி குறித்து பொதுமக்கள் அளித்த அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு இருந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT