Skip to main content

''வண்டிய பொறுமையா ஓட்ட தெரியாதா?'-தனியார் பேருந்து ஓட்டுநரை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவன்   

Published on 18/12/2022 | Edited on 18/12/2022

 

 "Don't you have patience or don't you know how to drive a bus?" - A college student scolded a private bus driver

 

தனியார் பேருந்துகள் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அதேபோல் தனியார் பேருந்துகளுக்கும் அரசு பேருந்துகளுக்கும் இடையே ஏற்படும் போட்டி காரணமாகவும் விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.  இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து அளவுக்கு அதிகமான வேகத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சென்றதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஓட்டுநரிடம் ஏன் பேருந்தை வேகமாக இயக்குகிறீர்கள் என தட்டிக் கேட்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

அந்த தனியார் பேருந்து ஓட்டுநரிடம் பேசும் கல்லூரி மாணவன், 'வண்டிய பொறுமையா ஓட்ட தெரியாதா? என கேட்க பேருந்து ஓட்டுநர் 'டைமிங்ல போகணும்' என சொல்கிறார். 'அது என்ன டைமிங். உயிர் போச்சுன்னா என்ன பண்ணுவ. இத்தனை பேர் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் பொண்டாட்டி பிள்ளைகள் இல்லையா?' என கேட்கும் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.