Skip to main content

உரிமைக்குழு கூட்டத்திற்கு வந்த திமுக,காங், எம்.எல்.ஏக்கள்!(படங்கள்)

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
 உரிமைக்குழு கூட்டத்திற்கு வந்த
 திமுக,காங், எம்.எல்.ஏக்கள்!(படங்கள்)


தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் மாதம் 14ல் தொடங்கி ஜூலை -19 தேதி வரை நடந்தது. கடைசி நாள் கூட்டத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். அதோடு தான் கொண்டு வந்த தடை செய்யப்பட்ட குட்காவையும் எடுத்து காட்டினார். இதைத் தொடர்ந்து அவைக்கு தடை செய்யப்பட்ட பொருளை கொண்டு வந்ததாக சபாநாயகர் தனபால் புகார் தெரிவித்தார். திமுக உறுப்பினர்கள்   21 மீது புகார் கூறப்பட்டது.  தொடர்ந்து இந்த பிரச்சனை உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க உரிமைக்குழு கூட்டம் இன்று( 28ம் தேதி) மாலை 5 மணிக்கு கூடியது. அவை உரிமை குழு தலைவர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது.

படங்கள்: அசோக்

சார்ந்த செய்திகள்