ADVERTISEMENT

ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்த 'ரேசன் அரிசி'

08:07 PM Feb 23, 2020 | kalaimohan

ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகும் அரிசிதான் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து பொதுவிநியோக திட்டத்தில் விநியோகிப்பதற்காக 2,500 டன் பச்சரிசி ரயிலில் ஈரோடு வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. அதன்படி. ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி விநியோகம் செய்ய ஆந்திரா மாநிலம் விசாகபட்டினம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 2 ஆயிரத்து 500 டன் பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

50 கிலோ கொண்ட அரிசி மூட்டைகள் தனி சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு இன்று வந்தடைந்தது. இந்த அரிசி மூட்டைகளை நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT