ADVERTISEMENT

4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)

05:17 PM Oct 22, 2019 | rajavel

ADVERTISEMENT

ராஜபாளையம் திமுக எம்எல்ஏ எஸ். தங்கபாண்டியன், தனது மாத ஊதியத்தை ஏழை மக்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள், மலைவாழ் மக்கள் போன்றோருக்கு நலத்திட்டங்களாக வழங்கி வருகிறார்.

ADVERTISEMENT

இராஜபாளையம் தொகுதியில் பொன்னகரத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள Light of life குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகத்தில் உள்ள 237 ஆதரவற்ற குழந்தைகளை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக அழைத்து தீபாவளிக்கு ஆடை வாங்கிக் கொடுத்துள்ளார்.



தற்போது நான்காவது ஆண்டாக அக்குழந்தைகளை இராஜபாளையம் விகாஸ் ஜவுளி கடைக்கு இன்று 22.10.2019 அழைத்து வந்த அவர், தனது 40, 41 வது மாத ஊதியத்திலிருந்து (ரூபாய் 2,10,000) குழந்தைகளுக்கு பிடித்தமான உடையை வாங்கி கொடுத்தார். கடைக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று தங்களுக்கு பிடித்த உடைகளை தாங்களே பார்த்து எடுக்குமாறு சொன்னார்.


இந்நிகழ்வில் குழந்தைகளுடன் பேசிய தங்கபாண்டியன், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே. ஆகவே அனைவரும் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். டாக்டர் கலைஞர் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளி என மாற்றி அவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்தார். அதுபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனித் துறை ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவிடுவார்.


மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் K.K.S.S.R. இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு MLA இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராகிய நானும், இராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் அன்றும் இன்றும் என்றும் உறுதுணையாக இருப்போம். விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென அனைவரும் கடவுளிடம் வணங்குமாறு கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளை கவனமாக காப்பகத்திற்கு செல்லுமாறு வழி அனுப்பி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், நகர துணை செயலாளர் சரவணன் பேரூர் செயலாளர் இளங்கோவன் மணல் செந்தில் ராஜை IT பிரிவு மாரிமுத்து , அழகுராஜா , மாயாவி பாரத் ராஜ், ஒன்றிய இளைஞர் அணி து.அமைப்பாளர் மாரிமுத்து மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT