Thangapandian MLA who gave a gift to destitute children and sanitation workers

ராஜபாளையத்தை சேர்ந்தஎம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் கடந்த 85 மாதங்களாக, தான் பெற்றுவரும் எம்.எல்.ஏ. ஊதியத்தை எளிய மக்களுக்காகச் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்போது, மூன்று மாதங்களுக்கான தனது எம்.எல்.ஏ. ஊதியம் ரூ.3,15,000-லிருந்து, பொன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகர் Light of Life குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூர் அருளோதயம் ஆதரவற்றகுழந்தைகள் காப்பகம் ஆகிய 3 காப்பகங்களில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.

Advertisment

கடந்த 6 வருடங்களைப் போலவே, இந்த 7-வது ஆண்டிலும் அக்குழந்தைகளை ஜவுளிக்கடைக்கு அழைத்துவந்து, அவர்களுக்குப் பிடித்தமான புத்தாடையை அவர்களையே தேர்வு செய்ய வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அவர்களிடம் “நீங்கள் ஆதரவற்ற குழந்தைகளல்ல; அனைவரதுஆதரவையும் பெற்ற குழந்தைகள். தீபாவளி நாளில் உங்களதுஆசிரமங்களுக்கு நேரில் வந்து உங்களுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன்.’ என்று உறுதியளித்து அனுப்பிவைத்தார்.

Advertisment

Thangapandian MLA who gave a gift to destitute children and sanitation workers

மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தங்கப்பாண்டியன்எம்.எல்.ஏ. ஏற்பாட்டில், கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியமுன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதத்தில், தொடர்ந்து 5-வது முறையாக,ராஜபாளையம் ஒன்றிய, நகர,பேரூர் பகுதிகளைச் சேர்ந்த 1006 தூய்மைப் பணியாளர்களுக்கு, பெண்களுக்குசேலை மற்றும் இனிப்புகளையும், ஆண்களுக்கு வேட்டி, சட்டை மற்றும்இனிப்புகளையும் தனுஷ் M.குமார் எம்.பி.யும், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வும்வழங்கியிருக்கின்றனர்.