திமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இராஜபாளையம் தொகுதி முழுவதும் அத்தொகுதியில் திமுக எம்எல்ஏவான தங்கப்பாண்டியன் ஒரு லட்சம் முக கவசங்களை வழங்க உள்ளார்.

Advertisment

அதன் முதல்கட்டமாக 50,000 முக கவசங்களை இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு வழங்க அனைத்து திமுக கழக கிளைச் செயலாளர்களை செட்டியார்பட்டியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வரவழைத்து இன்று 05.04.2020 வழங்கினார்.

Advertisment

dmk

நாளை இராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் 50,000 முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு அந்தந்த தி.மு.கழக நிர்வாகிகள் முறையாக வழங்குமாறு அறிவுரை வழங்கினார். முக கவசம் தேவைப்படுவோர் அப்பகுதியில் உள்ள தி.மு.கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் முக கவசங்களை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.

dmk

அதனைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவினால் இராஜபாளையம் தொகுதியில் உணவின்றி சிரமப்படும் சுமார் 6000 எழை எளிய பொதுமக்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் கடந்த 24.03.2020 அன்று முதல் இன்று வரை தினந்தோறும் மதிய உணவை தங்கப்பாண்டியன் வழங்கி வருகிறார். அந்த உணவு சமைக்கும் இடத்தையும் மற்றும் பார்சல் செய்யும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் பூமாரி மாரிமுத்து மகேஸ்வரி தொந்தியப்பன் அண்ணாமலை ஈஸ்வரன், முத்துச்சாமி அனைத்து கிளை கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment