Skip to main content

தேர்தல் முடிந்ததும்  அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம் -கி.வீரமணி 

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 8 ந் தேதி தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. சிலை உடைக்கப்பட்ட தகவல் அறிந்து வந்த பெரியார் தொண்டர்கள் சாலை மறியல், காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. அதனால் போலிசாரும் வருவாய் துறையினரும் சிலையை சீரமைத்து சிலை உடைத்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  அதனால் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டதுடன் மெய்யநாதன் எம். எல். ஏ. வுக்கு எழுதிக் கொடுத்தனர். 

 

k


சிலை சீரமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு வாரம் கடந்தும் சிலை உடைத்தவர்களை கைது செய்யவில்லை. இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறந்தாங்கி வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது மெய்யநாதன் எம். எல். ஏ, சிபிஎம் மாசெ கவிவர்மன் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

செய்தியாளர்களிடம் வீரமணி பேசியபோது, நாடாளுமன்ற தேர்தல் முடிவு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாக உள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், தோல்வி பயத்தினால் பெரியார் சிலையை உடைத்து,  கலவரத்தை தூண்டி தேர்தலை நிறுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டுள்ளனர்.  ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளதால் எத்தகைய போராட்டத்திலும் ஈடுபட வேண்டாமென  அமைதிகாத்து வருகிறோம். 

 

ஒருவாரமாகியும்  அமைதியாக இருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். சிலையை சீரமைத்து கொடுத்தீர்கள் பாராட்டுகிறோம். ஆனால் குற்றவாளிகளை பிடிக்க கூடாது என்று போலிசாருக்கு மேலிட அழுத்தங்கள் இருப்பதாக நினைக்கிறோம்.


     பல இடங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களால்தான் பெரியார் சிலை உடைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.  அதைப்போன்று ஒரு போலிக் குற்றவாளியை அறந்தாங்கி சிலை உடைப்பு சம்பவத்திலும் தேடிப்பிடிக்காமல் உண்மைக் குற்றவாளிகளை  கைது செய்ய வேண்டும்.


  போலீஸார் சுதந்திரமாக செயல்படாதபடி அவர்களின் கைகள் கட்டப்பட்டு ள்ளதைப் போன்று அவர்களின் செயல்பாடுகள் உள்ளன.  தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்குள் கண்டுபிடிக்கவில்லை என்றால்  அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
   


 

சார்ந்த செய்திகள்