Man arrested for selling cannabis to college students

Advertisment

புதுச்சேரி எல்லைப் பகுதியான முள்ளோடை- குருவிநத்தம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகேயுள்ள மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போதுசந்தேகத்திற்குரிய வகையில் வந்தஒருவரைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரது வாகனத்தை சோதனையிட்ட போது, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோகஞ்சா மற்றும் எடைமெஷின்ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஷ்(வயது 23) என்பதும், சென்னையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.