Skip to main content

"முதலமைச்சராக சின்ன முடிவு கூட எடுக்க முடியல..." - தமிழிசை முன்னிலையில் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த புதுவை முதல்வர்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

 

jkl

 

முதலமைச்சராக எந்த ஒரு சின்ன முடிவையும் எடுத்து செயல்படுத்த முடியவில்லை என்று புதுவை ஆளுநர் தமிழிசை முன்பு அம்மாநில முதல்வர் ரங்கசாமி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுவை மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதல்வராக ரங்கசாமியும், ஆளுநராகத் தமிழிசையும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் புதுவையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் ரங்கசாமி., தமிழிசையை மேடையில் வைத்துக்கொண்டே மத்திய அரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தன்னுடைய ஆதங்கமாகத் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

விழாவில் பேசிய அவர், "புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகிறோம் என்ற உறுதிமொழியைத் தேர்தல் நேரத்தில் கூறியிருந்தோம். ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் அதை நம்மால் செய்ய இயலவில்லை. ஒரு சின்ன முடிவு எடுக்க வேண்டியதாக இருந்தாலும் மத்திய அரசின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது" என்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி அரசின் சுற்றுலா மேம்பாடு; 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்'  மியூசியம் திறப்பு

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Opening ceremony Of Artist AP Shreethar's Wonders of White Town 

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்-இல் பிரம்மாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.

வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மைகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.

Next Story

சிதம்பரம் தில்லை அம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம்

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

Puducherry CM Samy darshanam at Chidambaram Thillai Amman temple

 

சிதம்பரம் நகரத்தில் பழமை வாய்ந்த தில்லை அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த மாதம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மண்டல அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை மதியம் சாமி தரிசனம் செய்தனர்.

 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இதனையடுத்து, தில்லை அம்மன் மற்றும் தில்லைக் காளி ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலைச் சுற்றி வந்தார் . பின்னர் அங்குக் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை அருந்தினார். அவருக்கு அளித்த பிரசாதத்தை அவருடன் வந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் அவரது கையால் எடுத்து வழங்கினார். இதனை அனைவரும் பெற்றுக் கொண்டனர். இவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்டபோது அவர் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார்.