ADVERTISEMENT

பொது ஏலம் விடப்பட்ட திருச்சி சத்திரம் பேருந்து நிலைய கடைகள்

04:54 PM Jan 20, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாநகரில் சீர்மிகு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி திறந்து வைத்தார். சுமார் 28 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் 54 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த கடைகள் அனைத்தும் பொது ஏலம் மூலம் விடப்பட்டு அதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானத்தை ஈட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய கடைகளுக்கான ஏலம் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் முஜீபுர் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த பொது ஏலத்தில் ஏற்கனவே சத்திரம் பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தி வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுப்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். எனவே பரபரப்பாக மாநகராட்சி அலுவலகம் காணப்பட்டதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT