Drugs trapped in the train!

Advertisment

வட மாநிலங்களில் இருந்து திருச்சி வரும் ரயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் உரிமை கோரப்படாத பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது. அதை சோதனையிட்டு பார்த்தபோது, அதில் ரூ.39 ஆயிரம் மதிப்புள்ள பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அதைக் கொண்டு வந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.