ADVERTISEMENT

வாட்ஸ்அப் பணப்பட்டுவாடா சேவை வேகமெடுக்க வாய்ப்பு! 

12:00 AM Apr 15, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வாட்ஸ் அப் நிறுவனம், 10 கோடி வாடிக்கையாளர்கள் வரை பணப்பட்டுவாடா சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. என்பிசிஐ (NPCI) எனப்படும் தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம், இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

தற்போது 4 கோடி பேர் வரை பணப்பட்டுவாடா சேவை வழங்க வாட்ஸ் அப்க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அது 10 கோடியாக உயரவுள்ளது. இந்தியாவில் முன்னணி தகவல் தொடர்பு ஊடகங்களில் ஒன்றாக விளங்கும் வாட்ஸ் அப், பணப்பட்டுவாடா சேவையிலும் ஈடுபட்டு வருகிறது.

எனினும், ஆன்லைன் பணப்பட்டுவாடா சந்தையில் அந்நிறுவனம் 0.02% பங்குகளை மட்டுமே வகிக்கிறது. இந்த நிலையில், தனது பணப்பட்டுவாடா தளத்தை விரிவாக்க கிடைத்திருக்கும் அனுமதி மூலம் வாட்ஸ் அப் பெரியளவில் கால் பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலையில், ஆன்லைன் பணப்பட்டுவாடா சந்தையில் ஃபோன்பே 49% பங்குகளையும், கூகுள் பே 35% பங்குகளையும், வகிக்கின்றன. பேடிஎம் மூன்றாவது இடத்தில் உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT