Skip to main content

நள்ளிரவில் நூறு கோடி ரூபாய் டெபாசிட்; சைபர் செல் போலீசார் அதிர்ச்சி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

One hundred crore rupees deposit at midnight; Good luck with the account

 

'பணம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டும்' என்று சொல்வார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் கூலித் தொழிலாளி ஒருவருக்கு அக்கவுண்ட்டை பிச்சிக்கிட்டு கொட்டியுள்ளது பணம். ஆனால் அதை அவர் பயன்படுத்த முடியாது என்பது தான் சோகம்.

 

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நசீருல்லா மண்டல். நசீருல்லா மண்டல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு ஒன்று வைத்திருந்தார். அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 17 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் ஒரே நாள் இரவில் 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனது.

 

100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனது குறித்து சைபர் செல் காவல்துறை அவருக்கு அனுப்பிய அறிக்கையை வைத்தே அவர் இதனைத் தெரிந்து கொண்டார். எப்படி அவருடைய வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவருடைய வங்கிக் கணக்கானது தற்பொழுது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிக்கிய பணக் குவியல்; அமலாக்கத்துறை அதிரடி!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
A pile of money stuck up; Enforcement action

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே. ராம் என்பவர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சட்டவிரோத பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் வீரேந்திர கே. ராம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் உதவியாளரின்  வீட்டு வேலைக்காரர் சஞ்சீவ் லால் என்பவரிடம் இருந்து ரூ. 25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அறை ஒன்றில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில், “அவர்கள் அனைவரும் கொள்ளையடிப்பவர்கள். லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஷிபு சோரன் குடும்பத்தினர் நாட்டை கொள்ளையடிக்கும் வேலையை செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக, அரசு வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.