/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karnataka32323.jpg)
கடன் தராத ஆத்திரத்தில் வங்கிக்கு தீ வைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், ஹவேரி பகுதியைச் சேர்ந்த நபர், அங்குள்ள வங்கிக் கிளையில் கடன் கேட்டு அணுகியுள்ளார். அந்த நபர் அளித்த ஆவணங்களை பரிசீலித்த வங்கி, ஆவணங்கள் சரியாக இல்லாததால், அவருக்கு வங்கிக் கடனை வழங்க வங்கி மேலாளர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வங்கிக்கு தீ வைத்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனிடையே, மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த காவல்துறையினர், வங்கிக்கு தீ வைத்த நபரை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வங்கி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)