Skip to main content

வங்கிகளில் டெபாசிட் வட்டி விகிதம் அதிகரிப்பு!

 

Interest increase for deposits in banks!

 

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அங்கீகரித்த நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களின் டெபாசிட் வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளனர். 

 

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி 36 நாட்களில் இரண்டு முறையாகக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தியுள்ளன. அதேநேரம், வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக, அவர்கள் வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களும் 6% வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, சாதாரண மக்களின் டெபாசிட் வட்டி விகிதத்தை 2.90% முதல் 5.50% வரை உயர்த்தியுள்ளது. மூத்த குடிமக்களின் டெபாசிட்களுக்கு 6.30% வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

 

அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கிகளும், தனியார் வங்கிகளில் ஹெச்டிஎஃப்சி கோட்டக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகளும் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. 

 

இதை படிக்காம போயிடாதீங்க !