ADVERTISEMENT

பவானி சாகரில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

08:16 PM Jun 28, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று அணைக்கு வினாடிக்கு 1,247 கன அடி நீர் வந்தது. ஆனால் நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 78.07 அடியாக சரிந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 182 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று வரை காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது. அதேபோல் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 1,505 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT