Water opening at Bhavani Sagar Dam ...

Advertisment

பவானிசாகர் அணையில்இருந்துபாசனத்திற்காக வரும்14ஆம் தேதி திறக்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிகடந்த12 ஆம் தேதி அறிவித்திருந்தார்.இந்நிலையில் பவானிசாகர் அணையில்பாசனத்திற்காக நீர் தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் பவானிசாகர் அணையை திறந்து வைத்துள்ளனர்.

ஈரோடு பவானி சாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், 120 நாட்களுக்கு23,846.40 மில்லியன் கனஅடி திறந்துவிடப்படுவதால், 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்எனஎதிர்பாக்கப்படுகிறது.பவானிசாகர் அணையில் நீர் திறக்கப்பட்டதால் ஈரோடு,திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர்.