Skip to main content

''ஒற்றைத் தலைமை சீரியஸ்... 'ஆடலுடன் பாடலை கேட்டு' பாட்டுக்கு குத்தாட்டம்... வைரலாகும் அதிமுக தலைமை அலுவலக வீடியோ!

Published on 07/07/2022 | Edited on 08/07/2022

 

"One chief is serious... 'Dancing AIADMK head office video going viral!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற வலியுறுத்தல்களுக்கு பிறகு தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே பிளவு ஏற்படும் வகையில் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு மேல் வழக்குகள், மனு தாக்கல் என சீரியஸாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் 'ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்' எனும் பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பின்போது பயிற்சி வகுப்பிற்காக சிறிய திரை அமைக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது திரையில் எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த 'ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்' என்ற பாடல் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென மேடையில் ஏறி ஆட்டம் போட்டார். இந்த காட்சிகள் அங்கு இருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்