/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A7159.jpg)
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும்படி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை அம்மைநாயக்கனூர் போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் பயணித்த காரில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருந்தது. சடலம் குறித்து இருவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரில் உள்ள பெண் சடலம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில்பணியாற்றி வந்த பிரின்சி என்பது தெரிய வந்தது. ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் திவாகர். திருமணமாகிய நிலையில் திவாகர் பல்லடத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்பொழுது திவாகருக்கும் அங்கு வேலை பார்த்து வந்த பிரின்சி என்ற திருமணமான பெண்ணுக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவரம் திவாகர் மனைவிக்கு தெரிந்துவிட்ட நிலையில் அதனைக் கண்டித்துள்ளார். இதனால் பிரின்சியிடம் தங்களுடைய உறவை முறித்துக் கொள்ளலாம் எனத்திவாகர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரின்சி திவாகரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவாகர் அவரை கொலை செய்ய திட்டமிட்டு தன்னுடையஊரைச் சேர்ந்தஉறவினர் இந்திராகுமார் என்ற இளைஞரை திவாகர் பல்லடம் அழைத்துள்ளார். பல்லடத்திற்கு ஆம்னி காரில் வந்த இந்திரகுமாருடன் சேர்ந்து இருவரும் பிரன்சியை கொலை செய்தனர். பின்னர் சடலத்தை காரில் வைத்துக் கொண்டு சுற்றித்திரிந்த இருவரும் புதைப்பதற்காக இடத்தை தேடிக் கொண்டிருந்த பொழுது போலீசாரிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)