Skip to main content

சிரசு திருவிழாவுக்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
1000 policemen for Sirasu festival

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கை அம்மன் ஆலயத்தில் வரும் மே 14ஆம் தேதி சிரசு திருவிழா நடைபெறுகிறது. அதற்கு முன் நாள் மே 13 ஆம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. சிரசு திருவிழாவில் வட தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சில லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

குடியாத்தம் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கை அம்மன் ஆலயம் மற்றும் தேர் செல்லும் பாதை சிரசு செல்லும் பாதை உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த விழாவிற்கு 6  ஏடிஎஸ்பிக்கள், 15 டிஎஸ்பி உள்பட 1000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மோப்பநாய் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதன் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்