Skip to main content

சாதி மோதலை தூண்டும் மியூசிக்கல்லி.!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
musi


மியூசிக்கல்லி செயலியில் பயனர்கள் தங்களது முக பாவனைகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் பின்னணியில் பாடல்கள் அல்லது சினிமா வசனங்கள் அல்லது ஆடியோ போன்றவற்றை சேர்த்து அவற்றை பகிர்ந்து கொள்ளலாம். 19 நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஆப் 100 மில்லியன் பயனாளர்களை கொண்டிருக்கிறது.

இந்த ஆப் மூலம் புகழ்பெற்றவர் சித்ரா கஜோல். அதில் வரும் ரொமாண்டிக்கான பாடல்கள் பலவற்றுக்கு இவரின் ரொமாண்டிக் மொமெண்ட்ஸ் சிரிப்பை வரவழைத்தது. சிலர் பதிலுக்கு இணைந்து பாடுகிறேன் என்று காதை மூடி கொள்வது, காதில் இருந்து ரத்தம் வருவது போல் செய்வது, தூக்கு போட்டுக்கொள்வது போல நடிப்பது, என பல்வேறு செயல்களை செய்தும் சித்ரா கஜோலை நெகட்டிவ் பப்ளிசிட்டியில் பெரிய விஐபி ரேஞ்சில் ஆக்கிவிட்டனர். இதேபோல், திருச்சியை சேர்ந்த ரமேஷூம் மியூசிக்கல் ஆப் மூலம் புகழ்பெற்றுவிட்டார்.

 

 

ரஜினிமுருகன் படத்தில் பஞ்சாயத்து பண்ண 4 மீசைக்காரர்கள் பஞ்சாயத்து பண்ண வருவார்கள். அதில் ஒருவர் தான் இந்த மீசை ரமேஷ். சாமி-2, அஜித்குமாரின் விசுவாசம் ஆகிய படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இருந்தாலும், மியூசிக்கல்லி ஆப்பில் மீசை ரமேசுக்குன்னு ரசிகர் பட்டாளம் இருக்கத் தான் செய்கிறது. இதேபோல், கிராமத்து சிறுசுகள் முதல் நகரத்து பெருசுகள் வரை ஏராளாமானோர் இப்போது, தங்களது ஆன்ட்ராய்டு போனில் மியூசிக்கல்லி ஆப்-ஐ டவுன்லோடு செய்து வைத்திருப்பதோடு, தினமும் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். சிலர், தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சினிமா டயலக்குகளுக்கு ஏற்ப முகபாவனைகளை மாற்றி பதிவிடுகின்றனர்.
 

 

musi


தாங்கள் பதிவிடும் வீடியோவுக்கு எத்தனை லைக் விழுகிறது என்பதை பார்ப்பதும், தமது வீடியோவுக்கு எதிராக எத்தனை பதில் வீடியோக்கள், டூயட் வீடியோக்கள் வந்திருக்கிறது. என்பதை பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். சீரியலில் நடிக்கும் நடிகைகளும், தொலைக்காட்சி ஊடங்களில் வேலை பார்க்கும் வி.ஜேக்களும் இதில் விதிவிலக்கு அல்ல. கிட்டத்தட்ட இது டப்ஸ்மேஷ் போன்ற செயலி என்றாலும், ஒவ்வொரு பயனாளர்களும் தங்களது வீடியோவை செல்போனில் சேமித்து வைக்கலாம், மற்றவர்களுக்கும் பகிரலாம் என்பதால், சமூகவலைத்தளங்களில் இப்போது மியூசிக்கல்லி ஆப் தான் முன்னணியில் இருக்கிறது. அதே நேரத்தில் இது இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 

mus



குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாமகவுக்கும்-வி.சி.கவுக்கும், தென்மாவட்டத்திலோ பண்ணையார் - பசுபதி பாண்டியன் டீமிற்கும் எப்போதுமே ஆகாது. கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்கு இடையே சுமூக உறவு கிடையாது. இந்த நிலையில், ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சியின் உரையை மியூசிக்கல்லி ஆப்பில் பதிவிட்டால், எதிர் தரப்பினர் அதற்கு மாற்றாக அவதூறு செய்யும் வகையில் அதாவது, செருப்பை தூக்கி காட்டுவது, அங்க அசைவுகளை அநாகரீக முறையில் காட்டி பதிவிடுவது தொடர்கதையாகிறது. அதேபோல், எதிர் தரப்பினர் தங்களது தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசும் உரையை பதிவிட்டால், அதை கிண்டல் செய்யும் விதமாக பதில் வீடியோக்கள் பகிர்வதும், மாற்று கட்சியினர் கொடிகள், சின்னங்களை சேதப்படுத்துவது, தீ வைப்பது போன்ற வீடியோக்களை பகிர்கின்றனர்.

​ சிலர் தங்கள் ஊரின் முகப்பில் இருக்கும் கொடிக்கம்பத்தின் அருகே நின்று, ‘என் கொடி பறக்கும் இடத்திலே வேறு எவன் கொடியும் பறக்க கூடாது’ என ரஜினிகாந்தின் வீர வசனத்தை பதிவிட்டு பகிர்கின்றனர். இதை பார்க்கும் சாதாரண மக்கள் ஜஸ்ட் லைக் என பார்த்துவிட்டு சென்றுவிடுவர். ஆனால், நாடி நரம்பு எல்லாம் ஜாதி வெறி ஊறி இருக்கும் சிலர் அந்த ஊருக்கே சென்று தகராறு செய்ய வாய்ப்பு உண்டு. ஆக, ஜாதி மோதலுக்கு பிள்ளையார் சுழிபோடும் தளமாகவே மியூசிக்கல்லி ஆப் பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்