ADVERTISEMENT

'அம்மா உயிர்த்தெழுவார்...' - உடல் மீது பைபிள் வைத்து ஜெபத்தில் ஈடுபட்ட மகள்கள்!

04:39 PM Oct 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணப்பாறை அருகேயுள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி. இவருக்கு திருமணமாகாத நிலையில் ஜெசிந்தா(43) மற்றும் ஜெயந்தி (40) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மேரி கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில் அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேரி இறந்துவிட்டதையும் அவரது உடலை அடக்கம் செய்யாமல் மகள்கள் இருவரும் மீண்டும் உயிர் வந்து விடும் என பைபிளை சடலத்தின் மீது வைத்து ஜெபம் செய்து வந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் மேரியின் உடலை அடக்கம் செய்ய மகள்கள் இருவரிடமும் அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மகள்கள் இருவரும் உறவினரை திட்டி வெளியே அனுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு மணப்பாறை உதவி ஆய்வாளர் சூர்யா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். நீண்ட நேரமாக போலீசார் கதவை தட்டியும் திறக்காத நிலையில் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்திருக்கின்றனர். உள்ளே சென்று பார்த்த போது, மேரியின் உடல் பாதி அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை மீட்க முயன்றனர். அப்போது மகள்கள் இருவரும் தனது தாய் இன்னும் உயிரோடு தான் இருப்பதாக கூறி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் மகள்கள் இருவரிடமும் மேரியை மருத்துவமனைக்கு கொண்டு உயிரை காப்பாற்றிவிடலாம் என சமாதானப்படுத்த முயன்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதன் பின்பு உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மேரியின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து ஏழு நாட்கள் கழிந்தது எனவும் உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் கூறினார். மருத்துவர் கூறியதை ஏற்க மறுத்த மகள்கள் இருவரும் தாய் உயிருடன் வந்துவிடுவார் எனக் கூறி அங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே மகள்களிடம் இருந்து தாயாரின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT