/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/240_7.jpg)
திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் ரயில்வே குடிசை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார்(30). இவர் கனகவல்லி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வர்ஷினி என்ற ஒரு மகள் உள்ளார். இதனிடையே கிருஷ்ண குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த திலகவதி என்பருக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் குடிபோதையில் வந்த கிருஷ்ணகுமார், தனது மகள் வர்ஷினியை அழைத்து, தனது கள்ளக்காதலியையும் வீட்டில் சேர்த்து வைத்து உனது தாய் கனகவல்லியை வாழச்சொல் என்று மிரட்டி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகள் வர்ஷினி தனது தந்தையை திட்டி உள்ளார். குடிபோதையில் இருந்து அவர் ஆத்திரம் அடைந்து கத்தியை எடுத்து தனது மகள் என்று பாராமல் வர்ஷினியை குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த வர்ஷினி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து தாய் கனகவல்லி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த பாலக்கரை போலீசார் கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)