லண்டனை சேர்ந்தவர் லாரன் வால். தந்தையை இழந்தவரான இவர் தனது தாய் ஜூலியின் அரவணைப்பிலேயே வளர்ந்துள்ளார். 2004-ல் இவருக்கும் ஏர்போட் ஊழியராக பணியாற்றி வந்த பால் ஒயிட் என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தந்தையை இழந்த பெண் என்பதால் தன் மகள் லாரன் வாலின் திருமணத்தை சிறப்பாக நடத்தியுள்ளார் ஜூலி.

incident

திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக மலை வாசஸ்தலமான தேவோனுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது கணவனைப் பிரிந்து தனிமையில் இருக்கும் தனது தாய் ஜூலியை தனியாக விட்டுவிட்டு செல்ல மனமில்லாத லாரன் வால், அவரையும் தங்களுடன் வருமாறு வற்புறுத்தி கூறியுள்ளார். அப்போது புதிதாக திருமணம் முடிந்த இளம் ஜோடி தனியாக போகட்டும் என்று ஜூலி மறுத்துள்ளார். பின்பு தனது மகள் லாரன் வால் வற்புறுத்தலால் மகளுடன் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார். தேனிலவுக்கு சென்ற இடத்தில் தன் தாயுடன் தன் கணவர் பால் ஒயிட் நன்றாக பேசிப் பழகுவதைப் பார்த்த லாரன் வால் தனது அம்மாவிடம் மகனைப் போல பழகுவதாக நினைத்துள்ளார்.

incident

Advertisment

இந்த நிலையில் லாரனின் சகோதரி ஒருவர் தன் தாய் ஜூலியின் செல்போனை எதார்த்தமாக எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது தன் தாய் ஜூலிக்கும் தன் சகோதரி லாரன் வாலின் கணவனான பால் ஒயிட்டுக்கும் நடந்த ஆபாச உரையாடல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பெற்றத் தாயே தன் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டதை அறிந்த வாரன் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். பின்பு திருமண மோதிரத்தை கழற்றிப் போட்டுவிட்டு தன் மாமியார் ஜூலியின் வீட்டுக்கே ஒரேயடியாக சென்றுவிட்டார் பால் ஒயிட்.

incident

Advertisment

இதனையடுத்து 9வது மாதத்தில் ஜூலி குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, 2009 இல் தான் முறைப்படி பால் ஒயிட்டை திருமணம் செய்துகொண்டார். இதில் மிக முக்கியமான விவகாரம் என்னவெனில் தனது மகளுக்கே போன் செய்து உனது கணவருடன் எனக்கு திருமணம் நடக்கிறது நீ கலந்து கொள் என அழைப்பு விடுத்துள்ளார் ஜூலி. தன் கணவனுக்கும் தன் தாய்க்கும் நடந்த இந்த திருமணத்தில், தன் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு லாரன் வாலும் கலந்து கொண்டுள்ளார். நடந்து பத்தாண்டுகளான நிலையில் லாரன் வால் இதை மீடியா முன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.