Skip to main content

மூதாட்டியிடம் பணம் பறிப்பு... சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

Money laundering to grandmother ... CCTV footage released shocking!

 

வாணியம்பாடியில் சாலையோரம் காய்கறி கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மூன்று இளைஞர்கள் பணம் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள முகமதுஅலி பஜாரில் உள்ள சாலை பகுதியில் மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்ற மூதாட்டி சிறிய அளவில் காய்கறி கடை வைப்பது வழக்கம். நேற்று வழக்கம்போல் மூதாட்டி காய்கறி விற்றுக்கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களில் ஒருவன் இறங்கி வந்து மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளான். மூதாட்டியிடம்  சுருக்குப்பையில்  புளி விற்ற 10 ஆயிரம் ரூபாய் பணம், உறவினர் ஒருவரின் கொலுசு இருந்தது. இதனை எப்படியோ நோட்டமிட்ட அந்த இளைஞன் முட்டை வாங்குவது போல் பேரம் பேசிக்கொண்டே  மூதாட்டின் கையிலிருந்த சுருக்குப்பையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுடன் தப்பி சென்றான். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியான நிலையில் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட அந்த மூன்று இளைஞர்களையும் வாணியம்பாடி போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்