Skip to main content

முதல்வர் பெயரிலான பேரவையின் மாநில தலைவர் காரில் செம்மர கட்டைகள்... அதிர்ந்த வனத்துறை!!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி வழியாக வெள்ளக்குட்டை செல்லும் வனப்பகுதி சாலையில் வெள்ளக்கல் என்ற இடத்தில் ஆம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்து அவ்வழியாக வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் சாலையில் ஓரம் நிறுத்தி விட்டு வனப்பகுதியில் மறைந்தனர். 

 

INCIDENT IN THIRUPATHUR... FOREST DEPARTMENT SHOCK


வனப்பகுதி சாலையில் இனோவா கார் மற்றும் இரு சக்கர வாகனம் தனியாக நின்றுகொண்டிருந்ததை பார்த்த வனத்துறையினர் அதன் அருகே வந்து சுற்றும் முற்றும் பார்த்தனர். யாரும் இல்லாததால் காரை திறக்க முற்பட்டனர், ஆனால் கார் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த வனத்துறையினர் கார் கண்ணாடி வழியாக பார்த்த போது காருக்குள் செம்மரக்கட்டைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுப்பற்றி வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

INCIDENT IN THIRUPATHUR... FOREST DEPARTMENT SHOCK


தகவலின் பேரில் ஆலங்காயம் ரேஞ்சர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் கார் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து ஆம்பூர் வன அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் காரை சோதனையிட்ட போது அதில் சுமார் 500 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது.


செம்மரம் கடத்திய இந்த கார் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பேரவையின் தமிழக மாநில தலைவர் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதில் அவர் போட்டோவுடன் கூடிய ஸ்டிக்கர் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். காரின் முகப்பிலும் அவரின் பெயர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிப்பட்ட செம்மரகட்டைகள் மற்றும் வாகனங்களின் மதிப்பு சுமார் ரூ 15 லட்சம் ஆகும்.

 

 

INCIDENT IN THIRUPATHUR... FOREST DEPARTMENT SHOCK

 

ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்டுவது மற்றும் கடத்துவதை தடுக்க காவல்துறை, வனத்துறை, சிறப்பு செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு பெரும் புள்ளிகளையெல்லாம் கைது செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரிலான பேரவையை தமிழகத்தில் தொடங்கி அதன் மாநில தலைவராக உள்ள பாஸ்கர் என்பரின் காரில் செம்மரம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளும்கட்சி எம்.எல்.ஏவுக்கு சவால்; ஒரு பக்க மொட்டை, மீசையை எடுத்த டிரைவர்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The driver challenged the YSR party MLA

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ளது புட்டபர்த்தி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்  ஸ்ரீதர் ரெட்டி. அரசியல்வாதியான இவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவருக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக புட்டபர்த்தி தொகுதியில் சீட் கொடுத்துள்ளனர். அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதன் காரணமாக ஸ்ரீதர் ரெட்டி இந்தத் தொகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்க நபராக இருந்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஸ்ரீதர் ரெட்டிக்கு ஏராளமான பணியாளர்கள் இருந்துள்ளனர். அதில், கார் ஓட்டுநராக பங்கர்ராஜூ மகேஷ்வர் ரெட்டி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீதர் ரெட்டியிடம் வேலை பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த டிரைவர், ஸ்ரீதர் ரெட்டி மீது மிகுந்த விசுவாசமாகவும், மரியாதையாகவும் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், திடீரென ஒரு சில காரணத்தால் எம்.எல்.ஏ ஸ்ரீதர் ரெட்டிக்கும் ஓட்டுநர் பங்கர்ராஜூ மகேஷ்வர் ரெட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரிடம் இருந்து திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார் ஓட்டுநர். இது குறித்து அவரின் நண்பர்கள் சிலர் டிரைவரிடம் கேட்டபோது, சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டி மிகவும் மோசமானவர் என்றும், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடமும் ஸ்ரீதர் ரெட்டியால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் நல்லவர் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

இதனால், சில சமயம் ஸ்ரீதர் ரெட்டியின் ஆதரவாளருக்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினரான ஸ்ரீதர் ரெட்டியை கடுமையாக விமர்சிக்கும் போதெல்லாம், இவரால் நான் மட்டும் பாதிக்கப்படவில்லை எனவும், ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இதனைக் கேட்டு எரிச்சலடைந்த இவரின் நண்பர்கள் சிலர், எம்.எல்.ஏ.வை எதிர்த்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீதர் ரெட்டி மீது நீ என்னதான் குறை சொன்னாலும் மறுபடியும் அவர்தான் இந்தத் தொகுதிக்கு எம்.எல்.ஏ ஆவார் என்றும் கூறியிருக்கின்றனர். இதனால் கடுப்பான ஓட்டுநர் மகேஷ்வர் ரெட்டி, இந்தத் தொகுதியில் கண்டிப்பாக இவருக்கு மறுபடியும் சீட் கொடுக்க மாட்டார்கள் எனக் கூறியிருக்கிறார். ஆனால், இவர் சொல்வது எதுவும் நடக்காது என அவரின் நண்பர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். அப்போது ஆவேசமான மகேஷ்வர் ரெட்டி, மறுபடியும் புட்டபர்த்தி தொகுதியில் ஸ்ரீதர் ரெட்டிக்கு சீட் கொடுத்துவிட்டால் நான் ஒரு பக்கம் மொட்டையடித்துக் கொள்கிறேன் எனவும், ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன் எனவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இதனை நான் உறுதியாகத்தான் சொல்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ஸ்ரீதர் ரெட்டிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஓட்டுநர், அவர் சவால் விட்டது போன்று புட்டபர்த்தியில் உள்ள சத்தியம்மா கோயில் முன்பு பாதி மொட்டையடித்துக் கொண்டார். மேலும், பாதி மீசையையும் எடுத்துக் கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ஸ்ரீதர் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், அவர் வெற்றி பெற்றால் தன்னைப் போல் மேலும் பலர் ஏமாற்றப்படுவார்கள் என்றும் ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார். இந்நிலையில், டிரைவர் மகேஷ்வர் ரெட்டி பாதி மொட்டையடித்து பாதி மீசை எடுத்துக்கொண்டு பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

தலைமைச் செயலகம் முன் முற்றுகை போராட்டம்; ஒய்.எஸ்.ஷர்மிளாவை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
YS Sharmila was arrested by the police for Blockade in front of Chief Secretariat for

ஆந்திர மாநில முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஷர்மிளா போட்டியிடாமல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். 

இதனைத் தொடர்ந்து இவர், கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார். மேலும் அவர் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார். இதனையடுத்து, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ். ஷர்மிளா நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் மாநில அரசின் தலைமைச் செயலக அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் ஒய்.எஸ்.ஷர்மிளாவை கைது செய்து வீட்டுக் காவலில் வைக்க ஆந்திரா போலீசார் ஈடுபட்டனர். ஆனால், அவர் நேற்று (21-02-24) இரவு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தங்கிவிட்டார்.

இதனை தொடர்ந்து, ஆந்திரா தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை விஜயவாடாவில் இன்று (22-02-24) அவர் தொடங்கினார். இதனால், ஷர்மிளாவையும், காங்கிரஸ் கட்சியினரையும் போலீசார் தடுக்க முயன்ற போது தடையை மீறி அவர் முற்றுகை போராட்டத்தை நடத்த முயன்றார்.  இதனால், அவரை போலீசார் குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள் ஆந்திரா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.