Skip to main content

'இடஒதுக்கீடு கொள்கையில் அ.தி.மு.க இரட்டை வேடம்' - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

medical counselling quota dmk mk stalin

 

இடஒதுக்கீடு கொள்கையில் அ.தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

 

ஓ.பி.சிக்கான இடங்களை இந்தாண்டே ஒதுக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரவில்லை என மத்திய அரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடஒதுக்கீட்டு கொள்கையில் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம், கபட நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பா.ஜ.க.வுடனான கூட்டணிக்காக அ.தி.மு.க. எதையும் விட்டுக் கொடுக்க தயாராகிவிட்டதா? நீட் தேர்வில் தமிழக கல்வி உரிமையைப் பறிகொடுத்தது போல் இட ஒதுக்கீட்டிலும் மாணவர்களை வஞ்சிக்கிறது. மாநில இடஒதுக்கீட்டு உரிமையை இழப்பதற்கு துணை போகாமல் அரசு விரைந்து செயல்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்