ADVERTISEMENT

மருது சகோதரர்கள் குருபூஜையில் அடாவடி; 479 பேர் மீது வழக்கு

10:36 PM Oct 28, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வருடந்தோறும் சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவு தினம் சிறப்பாக அனுசரிக்கப்படும். 221-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மருது பாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் சில பகுதிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை, தேவக்கோட்டை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட ஆறு வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் மருது சகோதரர்கள் குருபூஜையில் விதிகளை மீறிய 479 பேர் மீது மதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மருது சகோதரர்கள் குருபூஜைக்காக ஏராளமானோர் 4 சக்கர வாகனங்களில் மதுரைக்கு வந்திருந்த நிலையில்,வாகனங்களை அதிவேகமாக இயக்கியது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியது. அடாவடியாக இடையூறு செய்தது என 479 பேர் மீது மதுரை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தெப்பக்குளம் காவல் நிலையம், அண்ணா நகர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT