/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4659.jpg)
மதுரையில் நாட்டுப்புறப் பாடகி மரணமடைந்த விவகாரத்தில் கணவரே மனைவியை கொன்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மாரடைப்பால் பாடகி உயிரிழந்ததாகக்கூறப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் பல்வேறு கிராமங்களில் திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வந்தவர் மதிச்சயம் கவிதா. இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதேபோல் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் பல்வேறு கிராம திருவிழாக்களில் மைக் செட் போடும் தொழில் செய்து வருகிறார். மனைவியைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கவிதாவிற்கும் நாகராஜனுக்கும் திருவிழா மேடைகளில் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை மதிச்சியம் பகுதியில் உள்ள அவருடைய அம்மா வீட்டுக்கு கவிதா சென்றுள்ளார். அங்கு சென்ற நாகராஜன், கவிதாவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் சொன்னபடி 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் பேசிக்கொண்டிருந்த பொழுது திருப்பரங்குன்றத்தில் வீடு எடுத்து ஒன்றாக தங்குவதற்காகத்தான் பணம் கேட்டேன் எனத்தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு விருப்பமில்லை என கவிதா தெரிவித்ததோடு,பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட சண்டையில் கவிதாவின் கழுத்தை நெரித்துநாகராஜன் கொலை செய்துள்ளார்.
கவிதாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு விட்டதாக உடனடியாக ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் நாகராஜன். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கவிதாவின்கழுத்து எலும்புகள் உடைந்து இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து நாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டநிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
மதுரையில்நாட்டுப்புறப் பாடகி கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)