ADVERTISEMENT

பிடிபட்ட திருட்டு மணல் லாரியை விடுவிக்கும் முயற்சியில் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள்...

03:39 PM Oct 21, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள காட்டாறுகளில் தினசரி பல லாரி மணல் திருடப்பட்டுவருவதை சமூக ஆர்வலர்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில்தான் அ.ம.மு.க மன்னார்குடி நகரச் செயலாளர், வழக்கறிஞர் ஆனந்தராஜ் மாவட்ட கனிமவளத்துறைக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், இன்று அதிகாலை மன்னார்குடி 3ஆம் தெரு பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த (டாரஸ் லாரி) வாகனத்தை தணிக்கை செய்தனர்.


அப்போது அதில் அரசு அனுமதி இல்லாமல் (6.யூனிட்) மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாகனத்தைப் பறிமுதல் செய்த கனிமவளத்துறையினர். லாரியை, ஓட்டுநரையே அலுவலகத்துக்கு எடுத்துவரச் சொல்லிவிட்டு, கனிம வளத்துறையினர் லாரியை பின் தொடர்ந்தனர். மன்னார்குடி தாலுகா ஆபீஸ் ரோடு அருகே வந்துகொண்டிருந்தபோது லாரி ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டுத் தப்பிச் சென்று விட்டார்.

அதன் பிறகு கனிமவளத்துறை அதிகாரிகள் திருட்டு மணல் லாரியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்று விசாரித்த காவல்துறையினர், சம்மந்தப்பட்ட லாரி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகாந்தி என்பவர் பெயரில் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் ஆளுங்கடசியின் முக்கியப் புள்ளிகள் அந்தத் திருட்டு மணல் லாரியை விடுவிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து, லாரியை வழக்கின்றி வெளியில் விட்டால் போராட்டம் செய்வோம் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT