/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus3232111.jpg)
மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பேருந்து மீது சரக்கு லாரி மோதியது தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (27/12/2021) காலை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 பயணிகளுடன் சத்தியமங்கலம் நோக்கிஅரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆலாங்கொம்பு என்ற இடத்தில் சரக்கு லாரி திரும்பியபோது, எதிரே வந்த பேருந்து மீது நேரடியாக மோதியது. இதில் அரசுப் பேருந்து நிலைதடுமாறி சாலையோரம் இருந்த கடை ஒன்றின் மீது கவிழ்ந்து விழுந்தது.
உடனடியாக அருகில் இருந்த மக்கள் ஓடிச் சென்று காயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 8 பேரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கிளைச்சாலையில் இருந்து பிரதான சாலைக்கு சரக்கு லாரி திரும்பியபோது, அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)