ADVERTISEMENT

லெகின்ஸ் அணிந்து கல்லூரி பெண் விடுதிக்குள் புகுந்த பலே திருடன்! கதறிய மாணவிகள்...

09:35 AM Mar 03, 2020 | rajavel

ADVERTISEMENT

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்ஏஎம் பொறியியல் கல்லூரி உள்ளது. வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கடந்த 27ஆம் தேதி அதிகாலையில் முதல் தளத்தில் உள்ள அறையில் ஒரு மாணவி கழிவறை செல்ல எழுந்த போது அறையின் கதவு திறந்து கிடந்தது, பொருட்களும் சிதறி கிடந்தது செல்போன் காணவில்லை தனது செல்போன் எங்கே என்று அவர் தேடத் தொடங்கினார்.

ADVERTISEMENT



அதன் பின்புதான் தெரிந்தது மற்ற மாணவிகளின் நகை, பணம், லேப்டாப் எல்லாம் மாயமாகி இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த அறையைத் தொடர்ந்து மற்ற அறைகளில் தங்கி இருந்த மாணவிகளும் தங்களின் பணம் நகை லேப்டாப் செல்போன் ஆகியவை காணவில்லை என கதறினார்.

மாணவிகளின் சத்தம் கேட்டு விடுதியின் பொறுப்பாளர் அங்கு வந்து விசாரித்தபோது 18 செல்போன்கள், 18 பவுன் நகை, 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் லேப்டாப் ஆகியவை திருடு போய்விட்டதாக 10 மாணவிகள் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை 10 மணி அளவில் மாணவிகள் விடுதி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது முதல் மாடியில் இருந்து லெக்கிங்ஸ் சேலை அணிந்த ஒர் உருவம் கீழே இறங்கி செல்வது தெரிந்தது. அந்த உருவத்தை கவனித்தபோது அந்த உருவம் ஆண் எனவும் மீசையுடன் இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.


எனவே மர்ம நபர் பெண் வேடமணிந்து மாணவிகள் விடுதிக்கு சென்று நகை பணம் செல்போன் லேப்டாப் ஆகிவற்றை திருடியிருப்பது தெரிந்தது. இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கு இடையில் மீண்டும் கல்லூரிக்கு வந்த மாணவிகளை விடுதிக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அதிர்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக மறியலில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.


பேச்சு வார்த்தையில் மாணவிகள் நிர்வாகத்திடம் பெண்கள் விடுதிக்கு ஆண் ஒருவரை எப்படி விடுதி காப்பாளராக நியமிக்கலாம். அவரும் இரவு நேரங்களில் எங்கள் அறைகளை பூட்டிவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள மற்ற கல்லூரி கட்டிடங்களுக்கு தண்ணீர் மோட்டர் ஆன் பண்ணி விட சென்றால் மீண்டும் அதிகாலை தான் வருவார். அதுவரை நாங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறோம். அதிகபடியான கண்காணிப்பு கேமிரா பொறுத்த வேண்டும், திருட்டு போன பொருட்கள் மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட கல்லூரி நிர்வாகம் சில நாட்களில் இதை எல்லாம் சரி செய்த பின்பு விடுதி திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT