லலிதா ஜுவல்லரியில் நேற்று அதிகாலை சுவர் துளையிட்டு சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம்தொடர்பாக, திருவாரூரில் காவல்துறையினர்வாகனசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதுதிருடன் ஒருவன் சிக்கினான். சிசிடிவி காட்சியில் இரு திருடர்கள் இருந்த நிலையில், ஒரு திருடன் தற்போது பிடிப்பட்டுள்ளான். பிடிப்பட்ட திருடனிடம் இருந்து சுமார் மூன்று கிலோ வரை தங்க நகைகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பிடிப்பட்ட கொள்ளையன் தமிழகத்தை சேர்ந்தவன் என்பது காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில்தெரியவந்துள்ளது.

TRICHY LALITHAA JEWELLERY THIEF THIRUVARUR CHECK POST ARRESTED

Advertisment

நகைக்கடையில் கொள்ளை சம்பவங்கள் நடந்த 48 மணி நேரத்தில் கொள்ளையனை திருச்சி மாநகர காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. மற்றொரு திருடன் எங்கே இருக்கிறான் என்பது குறித்தும் திருச்சி காவல்துறையினர், பிடிப்பட்ட திருடனிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றன.