Skip to main content

போலீசுக்கு லஞ்சம் கொள்ளையன் முருகனின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

2018- ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர் பகுதியில் 19- க்கும் மேற்பட்ட தொடர் கொள்ளைகள் நடந்தன. அனைத்திலும் கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை குறித்த விசாரணையில் போலீஸார் குறிப்பிட்ட நகர்வுக்கு மேல் செல்ல முடியாத அளவுக்கு சாமர்த்தியமாகச் கொள்ளையர்கள் செயல்பட்டது தெரியவந்தது.
 

இதுகுறித்து விசாரணை நடத்திக் கொள்ளையர்களைப் பிடிக்க அண்ணா நகர் துணை ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில் ஏப்ரல் மாதம் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஏப்ரல் 15- ஆம் தேதி, முக்கியத் தகவல் ஒன்று கிடைத்ததது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து செயல்பட்டனர். 9 குற்றவாளிகள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
 

கொள்ளையர்கள் அனைவரும் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இவர்கள் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவர். இதில் போலீஸாரின் தீவிர தேடுதலில் மணிகண்டன், ரகு, மூர்த்தி, கோபால் ஆகியோர் சிக்கினர்.
 

இவர்களில் சிலர் கொள்ளையடித்த பொருட்களை வாங்கி விற்றுத்தரும் புரோக்கர்கள். அவர்களிடம் தீவிரமாக நடத்திய விசாரணை காரணமாக 4 மாதங்களுக்குப் பிறகு முக்கிய குற்றவாளியான தினகரன் (31) மற்றும் அவருக்கு உதவிய கூட்டாளிகள் லோகநாதன், காளிதாஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை மட்டும் போலீசாரால் நெருங்க முடியவில்லை. தொடர்ச்சியாக 50 முறைக்கு மேல் முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்தது. 

trichy lalithaa thief murgan police get it amount police investigationஇந்த நிலையில் திருச்சி லலிதா ஜீவல்லரி 13 கோடி கொள்ளை வழக்கில் கொள்ளையன் பெங்களூரு நீதிமன்றத்தில் வேற ஒரு வழக்கில் சரண் ஆகி பெங்களூர் சிறையில் இருந்தார்.அதை தொடர்ந்து சிறையிலிருந்து 6 நாள் போலீஸ் காவலில் எடுத்தது காவல்துறை. பின்பு திருச்சியில் பதுக்கி வைத்திருக்கும் நகைகளை தோண்டி எடுக்க பெங்களூர் போலீஸ் முருகனை அழைத்து வந்த போது, திருச்சி தனிப்படையினர் விசாரணையில் கொள்ளையன் முருகன் சொன்ன வாக்குமூலம் போலீஸ் வட்டராத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பெரம்பலூரில் நடைபெற்ற விசாரணையில் கொள்ளையன் முருகன் கொடுத்த வாக்குமூலத்தில் சென்னை அண்ணாநகரில் ஒரு வீட்டை உடைத்து நூற்றுக்கணக்கான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது என் தலைமையிலான கும்பல் தான். இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட தினகரன், காளிதாஸ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நான் மட்டும் தலைமறைவாகிவிட்டேன். அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் தொடர்ந்து என்னை தேடி விசாரித்து கொண்டிருந்தனர்.
 

இந்த நிலையில் நான் ஒருநாள் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தொடர்பு கொண்டு என்னை எல்லாரும் தேடுவதை விட்டுட்டாங்க, நீங்கள் மட்டும் ஏன் தொந்தரவு செய்றீங்க… உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்று பேரம் பேசி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்த காவலர்கள் வில்சன் ஜோசப் ஆகியோருக்கு 10 லட்சம் பேரம் பேசி ஒருவனிடம் கொடுத்தேன். அதிலும் திருச்சி நம்பர் 1 டோல்கேட் சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் எடுத்த பணத்தை கொடுத்தேன்.
 

அதேபோல லலிதா ஜீவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த நகையில் 4.5 கிலோ தங்கத்தை விற்று, அதிலிருந்து 20 லட்சத்தை எடுத்துக்கொண்டு தற்போது புளியந்தோப்பில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தேன். சென்னை புறநகர் பகுதியில் உள்ள 99 காபி ஷாப் கடையின் வாசலில் என்னுடைய காரில் நானே ஓட்டிச் சென்ற பணப்பையை அங்கே வைத்து விட்டு வந்தேன். பிறகு அதனை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி எடுத்துச் சென்றார்.
 

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அங்கு உள்ள சிசிடிவி கேமராவை பதிவான காட்சிகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று முருகன் அலட்டிக்கொள்ளாமல் சொன்னதும், விசாரித்த போலீசாருகே வியர்த்து விட்டது. முருகனின் அதிரடி வாக்குமூலத்தை போலீஸார் வீடியோவுடன் பதிவு செய்து செய்திருக்கிறார்கள். இன்னும் முருகனை தமிழக போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கும் போது இன்னும் என்னவெல்லாம் சொல்ல போகிறனோ என்று அவனிடம் இருவரை வாங்கி திண்ற அதிகாரிகள் திக்திக் பயத்துடன் இருக்கிறார்கள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...