/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arrestd_5.jpg)
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவிரி நகரில் நடந்து சென்ற ஒருவரிடம் கடந்த 17ஆம் தேதி கத்தியை காட்டி வழிப்பறி செய்ததாக தங்கமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் கண்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவரிடம் செல்போனை பறித்து சென்ற ஷேக்தாவூத், மன்சூர் அலி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் வழிப்பறி திருட்டில் கைதான தங்கமுத்து மீது ஏற்கனவே பல வழக்குகளும், ஷேக்தாவூத் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 3 வழக்குகளும், மன்சூர் அலி மீது இரண்டு வழக்குகள் உள்ளன. அதே போல் அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் ஓராண்டு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யசிறையில் உள்ள மூன்று பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)