ADVERTISEMENT

13 ஆண்டுகளாக இருக்கும் டிஎஸ்பியை மாற்றாமல் 50 நாட்களில் எஸ்.பி. விக்ரமனை இடமாற்றம் செய்தது ஏன்? 

08:50 AM Jul 11, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி விக்ரமனை திரும்ப பணி அமர்த்த வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பியை உடனடியாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை கரூர் மாவட்ட பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

விக்ரமன்

கரூர் மாநகரில் உள்ள வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கரூர் மாவட்ட எஸ்பியாக விக்கிரமன் பணியாற்றி வந்தார். அவர் கந்துவட்டி சந்துக்கடைகள் போன்ற சட்டவிரோத செயலை தடுத்து நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் மத்தியில் அவரின் நடவடிக்கைகள் பெரும் வரவேற்பு பெற்றது.

தமிழ்ராஜேந்திரன்

இந்நிலையில் 50 நாட்கள் கூட நிறைவு பெறாத நிலையில் அவர் திடீரென பணி மாற்றம் செய்யப்பட்டார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். சமூக வலை தளங்களிலும் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. அது மட்டுமின்றி அவருக்கு பதிலாக கரூர் மாவட்டத்தில் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட பாண்டியராஜன் என்பவர் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வழக்கு தொடர்பாக புகார் கொடுத்தவர்கள் பெயரை குறிப்பிட்டார். இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அபராதம் விதித்தது. அதே போல வழக்கில் எண்ணிக்கையை குறைத்துக் காட்டி கருத்து கூறியதால் அங்கு அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.

பாண்டியராஜன்

பொதுமக்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து அவரை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது. மேலும் திருப்பூரில் நடந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதற்காக இவர் மீது கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டது . ஏற்கனவே பொதுமக்களுக்கு பிரபலமான எஸ்.பி.விக்கிரமனை குறுகிய காலத்தில் தமிழக அரசு பணியிடை மாற்றம் செய்ததற்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழக அரசின் உள்துறை செயலாளர் இதற்கான உரிய பதிலை அளிக்க வேண்டும். மக்களுக்கு இதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி டிஎஸ்பி ஒருவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பல இன்ஸ்பெக்டர்களும் அவரை மாதிரியே தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்கள். இவர்கள் எல்லோரும் அரசியல் செல்வாக்கை வைத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஆனால் எஸ்பி விக்ரமன் ஐம்பது நாட்களில் மாற்றப்பட்டுள்ளார்.

கும்பராஜா

கரூரில் கல்லூரி பேராசிரியர் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத டி.எஸ்.பி. கும்பராஜாவை மாவட்ட நீதிபதியே கண்டித்தும் நடவடிக்கை எடுக்க சொல்லியும் அவர் இன்னும் மாற்றப்படவில்லை.

மாற்றப்பட்ட எஸ்பி விக்கிரமனை மீண்டும் பணியமர்த்த வேண்டும். அவரை மாற்றியது உச்ச நீதிமன்ற விதிமுறைகளுக்கு முரணானது என்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT