ADVERTISEMENT

மர்ம நபரின் அழைப்பால் ஒரு லட்சம் பணத்தை இழந்த அப்பாவி!

12:03 PM Sep 17, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது சிறுவாலை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன்(36). கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி அறிமுகமில்லாத நபர் ஒருவர் ஆறுமுகத்திடம் செல்போன் மூலம் பேசியுள்ளார். அப்போது தான் ஒரு தனியார் மொபைல் போன் டவர் அமைக்கும் நிறுவனத்தின் அதிகாரி என்று கூறிய அந்த மர்ப நபர் மணிகண்டனிடம் பேசியிருக்கிறார். பின்னர் அவர், உங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளோம்.

அதற்கு முன் பணமாக நீங்கள் 25 லட்ச ரூபாய் முன்பணமாகவும் 30 ஆயிரம் ரூபாய் மாத வாடகையாக உங்களுக்குப் பணம் தரப்படும் அதற்கு நீங்கள் எங்கள் நிறுவன உயர் அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகச் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய மணிகண்டன் அந்த நபர் கூறியபடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 1ஆம் தேதி வரை ஆறு தவணைகளாக ஒரு லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார் மணிகண்டன். அதன்பிறகு அந்த நபரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது அவரது போன் துண்டிக்கப்பட்டது. அப்போதுதான் மணிகண்டன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

தான் மோசடியில் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மணிகண்டன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து சுமார் ஒரு லட்சம் பண மோசடி செய்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதே மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் பகுதி உட்பட மேலும் சில இடங்களில் இதேபோன்று போன்ற செல்போன் டவர் அமைத்துத் தருவதாகக் கூறி செல்போன் மூலம் பேசி ஏமாற்றிப் பல லட்சம் பணம் பறித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அது குறித்தும் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பத்திரிக்கை, ஊடகங்களும் செய்திகளை வெளியீட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து அவ்வப்போது டெலிபோன் டவர் அமைப்பதாகக் கூறி பலரிடம் பணத்தைப் பறிக்கும் கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT