Skip to main content

“ஐஐடி மாணவி தற்கொலையில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் எங்கள் இயக்க நிர்வாகி அல்ல”- அறப்போர் இயக்கம்

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

சென்னை ஐஐடி கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு மூன்று ஆசிரியர்கள்தான் காரணம் என தன்னுடைய மொபைலில் நோட்டும் செய்திருக்கிறார். இந்நிலையில் மாணவி குறிப்பிட்டுள்ள மூன்று பேராசிரியர்களில் ஒருவர் சுதர்ஷன் பத்மநாபன். அவர் அறப்போர் இயக்கத்தை சேர்ந்தவர் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது.
 

fathima latheef

 

 

இந்நிலையில் இதை விளக்கும் விதமாக அறப்போர் இயக்கம் ஜெயராம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நேற்று முதல் ஐஐடி மாணவி தற்கொலை விஷயத்தில் 3 பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் சுதர்ஷன் பத்மநாபன் என்னும் பேராசிரியர் அறப்போர் இயக்க நிர்வாகி என்று ஒரு செய்தி இணையதளத்தில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. மேலும் சுதர்ஷன் பத்மநாபன் அறப்போர் இயக்க அலுவலகத்தில் நடந்த ஒரு பத்திரிகை சந்திப்பில் பங்கெடுத்த புகைப்படமும் பரப்பப்பட்டு வருகிறது. சுதர்ஷன் பத்மநாபன் அறப்போர் இயக்க நிர்வாகி என்பதில் துளி அளவும் உண்மை கிடையாது. அறப்போர் இயக்கம் தேர்தல் நேரங்களில் ஜனநாயக சீர்திருத்த அமைப்புடன் (Association for Democratic Reforms) சேர்ந்து அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் குற்ற பின்னணி குறித்து வெளியிடுவோம். எனவே அவர் ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் பிரதிநிதியாக பத்திரிகை சந்திப்பில் கலந்து கொண்டார். மேலும் அறப்போரின் சில பொது நிகழ்வுகளுக்கும் அவர் வந்துள்ளார். இது அனைத்தும் பத்திரிகை நண்பர்களுக்கும் தெரியும். எனவே சுதர்ஷன் அறப்போரின் நிர்வாகி அல்லது முக்கிய நிர்வாகி என்பது உண்மைக்கு புறம்பானது.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க கோருவது அவசியம். காவல்துறை நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்தி அந்த குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அறப்போரின் நிலைப்பாடு. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெளியே சொல்லாததால் தடுக்க முடியவில்லை” - மாணவர்கள் மரணம் குறித்து ஐஐடி விளக்கம்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

IIT statement on students passed awaIIT statement on students passed awayy

 

சென்னை ஐஐடியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கடந்த மாதம் சென்னை ஐஐடியில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அடுத்த மாதமே மீண்டும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், சென்னை ஐஐடியில் தரப்பில் இருந்து, “பொருளாதாரம், குடும்பப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க முடிவதில்லை” என்று விளக்கம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

ஐ.ஐ.டி. இயக்குநர் தமிழக முதலமைச்சருடன் சந்திப்பு

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

madras iit director meet tamilnadu chief minister for today

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (31/01/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் (சென்னை ஐ.ஐ.டி.) முனைவர் வி.காமகோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முதல்வர் பேராசிரியர் கோஷி வர்கீஸ், பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

கிராமப்புற மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. உடன் இணைந்து பயிற்சி வழங்குவது குறித்து முதலமைச்சருடன், ஐ.ஐ.டி. இயக்குநர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

 

பின்னர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, "சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இனிமேல் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். ஐ.ஐ.டி.யில் நேரடி வகுப்புகள் நடத்துவது பற்றி வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும். வருங்காலங்களில் விண்வெளி ஆய்வு, 6ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றார்.