Skip to main content

பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ -ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ -ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி 14.09.2017 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம். தலைமை : ஜியோ ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி.ஆளவந்தார், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் ,தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன்,  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள்ஜோதி. கோரிக்கைகள் : புதிய பென்ஷன்  திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். ஊதியக்குழு முடிவுகளை உடனே அமுல்படுத்த வேண்டும். 01.01.2016 முதல் 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 

மத்திய அரசு நீட் தேர்வில்  இருந்து விலக்களிக்க வேண்டும். மறியல் போராட்டத்திற்கு முன்னிலை வகித்தவர்கள்: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மகராஜன், மாவட்ட செயலாளர் பாரதிவளவன், மத்திய செயற்குழு உறுப்பினர் குமரிஅனந்தன்,தமிழ்நாடு் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் இ.மரியதாஸ், மாவட்டச் செயலாளர் சா.இளங்கோவன்,மாவட்ட துணைத் தலைவர் பி.தயாளன், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் பேராசிரியர் டாக்டர் துரைசாமி, பேராசிரியர் இராமராஜ் தமி ழ்நாடு கூட்டுறவு அலுவலர்கள் மாவட்ட தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி,தமிழ் நாடு கல்வித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகி மருதராஜ்,தமிழ் நாடு ஆசிரியர் பயிற்றுநர் சங்க மாவட்ட நிர்வாகி சீத்தாபதி,தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகி செந்தில் குமார், தமிழ்நாடு தொழிற் பயிற்சி துறை மாவட்ட செயலாளர் தெய்வராசா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செல்லப்பிள்ளை, மாவட்ட செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மாவட்ட பொருளாளர் பழனிசாமி,தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் மதியழகன் ஆகயோர் முன்னிலை வகித்தனர். 

காத்திருக்கும் போராட்டத்தில் 120பெண்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர். காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காவல் ஜாக்டோ - ஜியோ மாநில மைய முடிவுப்படி காத்திருக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. பி.தயாளன்., மாவட்ட துணைத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், பெரம்பலூர் மாவட்டம்.

-எஸ்.பி. சேகர்

சார்ந்த செய்திகள்