Muslims who gave order to Kaliamman temple

Advertisment

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கிராமத்தில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள கிள்ளை தைய்க்கால் பகுதியைச் சேர்ந்த சையத் சகா பாய் தலைமையில் இஸ்லாமிய மக்கள்ஒன்று கூடி காளியம்மன் அம்மனுக்கு வாழைப்பழம், மாதுளை பழம், திராட்சை, பட்டு துணிகள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகளைக் கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து சிறப்பு செய்தனர் இது அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

இதில் சமூக பண்பட்டாளர் ஈஸ்வர லிங்கம் மற்றும் எம்எல்ஏ பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் சிதம்பரம் ஏ.எஸ்.பி.ரகுபதி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.