ADVERTISEMENT

“என் நிலையை நினைத்து கண்ணீர் விட்டு அழுதேன்..” – பொது நிகழ்ச்சியில் கண்ணீர்விட்ட எம்.எல்.ஏ.

02:44 PM Mar 10, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த அமுலு. கடந்த மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, எங்களுடன் இணைந்து மகளிர் தினத்தை கொண்டாட வாருங்கள் என குடியாத்தம் அரசு மருத்துவமனை சார்பில் எம்.எல்.ஏவை அழைத்துள்ளனர். அவரும் வர ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி மகளிர் தினத்தன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் சிறப்பு அழைப்பாளரான சட்டமன்ற உறுப்பினர் அமுலுவை பேச அழைத்துள்ளனர்.

அமுலு பேசும்போது, “எங்கள் திருமணம் காதல் திருமணம். நாங்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டபோது, பெரும் மனச்சுமை இருந்தது. முதல் பெண் குழந்தை பிறந்தபோது, பெண் குழந்தை பிறந்துவிட்டதே. என்னைப்போல் கஷ்டப்படப்போகிறதே என என் நிலையை நினைத்து கண்ணீர் விட்டு அழுதேன்.

அப்போது என் அழுகை தவறு என்பதை என் மகள்கள் இப்போது நிரூபித்து வருகிறார்கள். இப்போது எனக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். என் தாயார் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார். எனக்கு எல்லாமுமாக இருந்தவர் என் தாய்தான். அவரின் இழப்பு எனக்கு பெரிய இழப்பு. இப்போது எனக்கு தாயாக இருப்பவர்கள் என் மகள்கள் தான்” எனச் சொல்லியபடி நா தழுதழுக்க கண்ணீர் விட்டு அழுதார். இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண் அதிகாரிகள், பொது மகளிரும் எம்.எல்.ஏவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத்தெரியாமல் திகைத்துப்போயினர்.

உடனே தனது கண்ணீரை துடைத்துக்கொண்ட எம்.எல்.ஏ அமுலு, “சமூகத்தில் பெண்களுக்கு பல்வேறு தடைகள் உள்ளன. அந்த தடைகளை தாண்டி இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனைப் படைக்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி நம்முடைய ஆட்சி, பெண்களுக்கான ஆட்சி. பெண்கள் பாதுகாப்புக்கு, வளர்ச்சிக்கு முக்கியத்தும் தரும் ஆட்சி என்பதை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன்” என பேசியுள்ளார்.


பொது மேடையில் மருத்துவர்கள், அரசில் பல்வேறு நிலையில் குடியாத்தத்தில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரிகள், பெண்கள் சமூக அமைப்பினர் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். எம்.எல்.ஏ அழுத விவகாரம் வெளியே தெரிய வந்து பரபரப்பாகிவிட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT