வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்தம் எடுக்கும் பிரச்சனையில் சில தினங்களுக்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் என்பவருக்கும், திமுகவைச் சேர்ந்தமுன்னாள் கவுன்சிலர் மணிமாறன் ஆகியோருக்கும்தகராறு ஏற்பட்டது. மகேந்திரன் ஆளும்கட்சி என்பதால் திமுக மணிமாறனை கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

murder

இந்நிலையில் இன்று 05.05.2018ந் தேதி காலை 11 மணிக்கு, அணைக்கட்டு ஒன்றிய அலுவலகத்தில் வந்த மகேந்திரன் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, கோபமாக அலுவலகத்துக்கு வந்த மணிமாறன் டீம், மகேந்திரனை அலுவலகத்திலேயே கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இதனை பார்த்த அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினர். அணைக்கட்டு மருத்துவமனை ஊழியர்கள் வந்து மகேந்திரன் உடலை பரிசோதித்து பார்த்தனர், அவர் இறந்துப்போனதை உறுதி செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலிஸார் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மணிமாறனை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.