Skip to main content

கொள்முதல் அரசாணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

High Court refuses to ban government from purchasing!

 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

 

இலங்கைக்காக 40,000 டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், அதிக விலைக்கு வாங்கப்படுவதாகக் கூறி ஜெய்சங்கர் என்பவர், வழக்கு தொடர்ந்திருந்தார். இந்திய உணவுக் கழகம் ஒரு கிலோ அரிசியை ரூபாய் 20- க்கு விற்கும் நிலையில், தமிழக அரசு ரூபாய் 33.50- க்கு தனியாரிடம் வாங்க உள்ளதாக மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். 

 

மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுவதாகவும், அவசர நிலை நேரங்களில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளிப்படைத் தன்மை சட்டத்தில் விலக்கு இருப்பதாகவும் தமிழக அரசு வழக்கு விசாரணையின் போது தெரிவித்தது. 

 

அரசின் விளக்கத்தையேற்று, வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

 

இதனிடையே, இலங்கைக்கு அனுப்புவதற்கான பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்