கலைஞர் எங்களிடம் கண்களால் பேசினார்: தா.பாண்டியன்
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கலைஞரை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநில செயலர் முத்தரசன் ஆகியோ சந்தித்து பேசினர்.
இதையடுத்து தா.பாண்டியன்,செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’கலைஞர் எங்களிடம் கண்களால் பேசினார். நாவால் நாட்டை தட்டி எழுப்பிய கலைஞர் இன்று எங்களை புன்முறுவலுடன் வரவேற்று வாழ்த்தினார். இயற்கையின் சவாலை சந்தித்து கலைஞர் நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன்.
சென்னை துறைமுகத்தில் ஆந்திர ஐஜி விசாரணை
செம்மரம் கடத்தல் தொடர்பாக சென்னை துறைமுகத்தில் ஆந்திர ஐஜி காந்தாராவ் விசாரணை நடத்தினார்.