ADVERTISEMENT

சீல் வைக்க மறந்த அரசு... சமையல் செய்ய பற்றவைத்த தீயால் வெடிவிபத்து!

05:49 PM May 15, 2019 | kalaimohan

நெல்லை மாவட்டத்தின் விருதுநகர் மாவட்ட எல்லையை ஒட்டிய வரகனூர் கிராமம். இங்கே குணா பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த பிப் 22 அன்று இங்கு ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் மரணமடைந்தார்கள். அதன் விளைவாய் அந்த பேக்டரி பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால் அதன் தொடர்ச்சியான பேக்டரியின், பட்டாசு ஸ்டாக் உள்ள சற்று ஓரத்திலிருந்த மற்றொரு அறையை சீல் வைக்க மறந்து விட்டனர். ஆனால் அங்கு பட்டாசு ரகம் ஸ்டாக் உள்ளது. யாருக்கும் தெரியாது. இதனிடையே இன்று காலை, கரிவலம் அருகிலுள்ள மாங்குடியைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்டவர்கள் அதன் பக்கமுள்ள வேலி மரங்களை வெட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னதாக அந்த பட்டாசு ஸ்டாக் அறையின் பக்கம் தங்களுக்கான உணவையும் சமைத்துள்ளனர். பின்னர் 11.30 மணிவாக்கில் அவர்களில் 5 பேர்கள் அந்த பட்டாசு ஸ்டாக் அறையை ஒட்டி இருந்தவாறு உணவு சாப்பிட ஆரம்பித்துள்ளனர். காடு என்பதால் காற்றின் வேகம் இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் உணவு சமைத்த நெருப்பினை அணைக்க மறந்து விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் நெருப்பு பொறி ஸ்டாக் அறையில் தெறித்ததின் காரணமாக பட்டாசுகள் தீப்பிழம்பாய் வெடித்துச் சிதறியதில் பக்கத்திலிருந்த 5 பேருக்கும் கடும் தீக்காய்ங்கள் ஏற்பட்டிருக்கிறது.

பட்டாசு அறை தரைமட்டமானது தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த வி.ஏ.ஓ.லிங்கம் படுகாயமுற்ற 5 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். கனகராஜ் (42) குருசாமி (62) அர்ஜூன் (17 காமராஜ (58) கோபால் (61) எள படுகாயமுற்ற இவர்களில் 3 பேர் சிவகாசி, மற்றும் 2 பேர் நெல்லை அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து திருவேங்கடம் தாசில்தார் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளார். மேலும் சம்பவ இடம் விருதுநகர் மாவட்ட எக்ஸ்ப்ளோசிங் கட்டுப் பாட்டிற்குள் வருவதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே சிகிச்சை பலனின்றி கோபால் என்பவர் மரணமடைந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT